மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
'நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஆரம்பமான படம் 'கிட்னா'. அவரே படத்தின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்க இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமாகி சில நாட்கள் நடைபெற்றது. அதன் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சமுத்திரக்கனியும் ஒரு நடிகராக பல படங்களில் நடித்து வந்ததாலும், நிதிப் பிரச்சனையாலும் படம் தற்காலிகமாக நின்றிருந்தது. தற்போது, கிடப்பில் போடப்பட்ட 'கிட்னா'வை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் சமுத்திரக்கனி.
இந்தப் படத்தில் 28 வயது முதல் 60 வயது வரை உள்ள நான்கு விதமான தோற்றங்களில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டால் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முடியாது என்பதாலேயே நடிப்பதற்காக ஒத்துக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்து விட்டு வர நேரமாகிவிட்டது என்கிறார் சமுத்திரக்கனி.