அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மலையாள சினிமாவில் மியா ஜார்ஜ் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் தற்போது அங்குள்ள இளவட்ட நடிகைகளில் அவர்தான் டாப் நடிகையாம். அதோடு, இளமையான கேரக்டரோ, சற்று முதிர்ச்சியான வேடமோ எதுவாக இருந்தாலும், அப்படியே மாறி நடித்து கைதட்டல் பெற்று விடுவாராம். அந்த வகையில், இதுவரை மலையாளத்தில் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து விட்ட மியா, தற்போது ஐந்தாறு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம். ஆனபோதும், அசின் மாதிரி தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்து விட்டு அதையடுத்து இந்தியிலும் கோலோச்ச வேண்டும் என்று மனதளவில் சினிமா ஆசை இருப்பதால்தான் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறாராம் மியா ஜார்ஜ். அப்படி தமிழில் இதுவரை அமரகாவியம், இன்று நேற்று நாளை படங்களில் நடித்திருக்கும் மியாவுக்கு, இன்று நேற்று நாளை ஹிட்டாக அமைந்திருப்பதால் அடுத்து தமிழில் ஒரு பெரிய இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. அதனால் புதிய படங்களை வரவேற்கத் தொடங்கியிருக்கிறார். மேலும், படப்பிடிப்பு தளங்களில் பெரும்பாலான நடிகர் - நடிகைகள் எந்தநேரமும் ஏதாவது ஜாலி அரட்டையடித்துக்கொண்டேயிருக்க, மியாவோ, ஸ்பாடடுக்குள் நுழைந்தபிறகு அந்த படம் சம்பந்தப்பட்டதை தவிர வேறு எதையும் பேச மாட்டாராம். மைண்டிலும் ஏற்றிக்கொள்ள மாட்டாராம். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவேதான் ஸ்பாட்டில் இருப்பாராம். மியா ஜார்ஜின் இந்த டெடிகேசன்தான் டைரக்டர்களுககு அவர் மீது நல்லதொரு இமேஜை ஏற்படுத்தி வருகிறதாம்.