ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களை இயக்கியவர் சுசீந்திரன், தற்போது விஷாலை வைத்து பாயும்புலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகளில் உருவானவை. ஆனால் இப்படி வித்தியாசமான கதைகளாக யோசித்த அவருக்கு டைட்டிலை வித்தியாசமாக யோசிப்பதுதான் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளதாம்.
அந்த வகையில், தனது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் தலைப்பைகூட தனது தந்தையார் நடத்தி வந்த கபடிக்குழுவின் பெயரையே வைத்து விட்டார் சுசீந்திரன். அதேபோல் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்துக்கு தலைப்பு தேடியபோது கதைக்கு தகுந்தபடி கிடைக்கவே இல்லையாம். அதனால்தான் ரஜினி நடித்த நான் மகான் அல்ல படத்தலைப்பையே வைத்து விட்டாராம்.