ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புத்தகம் என்றால் அது என்ன? என்று கேட்கும் நடிகைகள் மத்தியில் ஒரு நடிகை நூலகம் நடத்துவது ஆச்சர்யமான செய்தி அல்லவா? அவர் கன்னட நடிகை ரஜினி மகாதேவ்வய்யா. உதயா டி.வியில் தொகுப்பாளினியாக இருந்து நடிகையானவர். கன்னடத்தில் 3 படங்களில் நடித்துள்ள அவர் தற்போது தமிழில் வீரபாகு, களத்தூர் கிராமம், கொளஞ்சி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பெங்களூரில் தனது கல்லூரி பேராசியரிரும், புத்தங்கள் மீது ஆர்வத்தை தூண்டியவரின் பெயரில் பி.ஏ.ஸ்ரீதரா மீடியா லைப்ரரி என்ற பெயரில் நூலகம் நடத்துகிறார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னடம் மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன. இதனை பொதுமக்கள் எந்த கட்டணமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
"சின்ன வயதில் எனக்கு அக்கா வாசிப்பு பழக்கதை ஊட்டினார் அதன் பிறகு பெங்களூர் பல்கலைகழகத்தில் என்ஜினீயரிங் படித்தபோது அங்கு பேராசிரிராக இருந்த பி.ஏ.ஸ்ரீதரா எனக்குள் வாசிப்பு திறனை அதிகரித்தார். அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் எனக்கு கொடுத்தார். அதனால் நூலகத்திற்கு அவர் பெயரை வைத்தேன். எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் 4 மணி நேரம் வாசிப்பதை கடமையாக வைத்திருக்கிறேன்" என்கிறார் ரஜினி மகாதேவய்யா.