ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், பாபநாசம் என்ற பெயரில் ரீ-மேக்காகியுள்ளது. கமல், கெளதமி நடித்துள்ளனர். மலையாளத்தில் த்ரிஷயம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. வருகிற ஜூலை 3ம் தேதி பாபநாசம் படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவிப்பு வெளியான மறுநாளே சிறு தயாரிப்பாளர்கள் சார்பில் பாபநாசம் படத்திற்கு ரெட்கார்ட் போடப்பட்டது. அதாவது பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை தினங்களில் மட்டும் தான் ரிலீஸாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தசூழலில் ஜூலை 3ம் தேதி கமல் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சிறுபட்ஜெட் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர்.
இதுஒருபுறம் இருக்க உத்தம வில்லன் பட ரிலீஸின் போது ஏற்பட்ட விநியோகஸ்தர்கள் பிரச்னை இப்போதும் தொடர்கிறது. இதனால் பாபநாசம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக விநியோகஸ்தர் தரப்பிலும், கமல் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் படத்திற்கு எழுந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இதனையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பாபநாசம் படம் ஜூலை 3ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களில் பாபநாசம் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.