டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னையில், நடைபெற்ற 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கடந்த வருடத்திய சிறந்த மலையாள நடிகராக மம்முட்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 'வர்ஷம்' படத்தில் மகனை இழந்து வாடும் தந்தையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மம்முட்டி நடித்த இன்னொரு படமான 'முன்னறியிப்பு' சிறந்த மலையாளப்படமாக விருதுபெற்றுள்ளது. வேணு என்பவர் இயக்கியிருந்த இந்தப்படத்தில் சிறைக்கைதியாக மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் மம்முட்டி.
சிறந்த இயக்குனருக்கான விருது 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தில் நடித்ததற்காக மஞ்சு வாரியர் தட்டிச்சென்றார். சிறந்த புதுமுக நடிகையாக '1983' படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சிறந்த நடிகருக்காக அதே '1983' படத்தில் கதாநாயகனாக நடித்த நிவின்பாலிக்கும் விருது வழங்கப்பட்டது.
'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் மாற்றுத்திறனாளியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பார்வதிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதை 'அப்போதேகேறி' படத்தில் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயசூர்யா அள்ளினார். இயக்குனர் ஐ.வி.சசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் அற்புதமாக இசை ராஜாங்கம் நடத்தியிருந்த கோபிசுந்தர் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதே படத்தில் பாடிய ஹரிசரணுக்கு சிறந்த பாடகர் விருதும், 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தில் பாடிய சிறந்த பாடகிக்கான விருதும் வழங்கப்பட்டது. '1983' படத்தில் சூப்பர்ஹிட்டான மெலோடி பாடலான 'ஓலஞ்சாலி குருவி' பாடலை எழுதிய ஹரி நாராயணன் சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார்.