‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் டிவியில் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை கலக்கப்போவது யாரு என்றொரு காமெடி நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். அதில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், மதுரை முத்து உள்பட பலர் ஸ்டேன்டப் காமெடிகளை சொல்லி பிரபலமானார்கள். பின்னர் சினிமாவுக்குள்ளும் வந்து நடித்து பிரபலமாகி விட்டனர்.
பின்னர் அதே நிகழ்ச்சியை இன்னொரு சேனல் வேறு பெயரில் நடத்தியதால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது விஜய் டிவி. ஆனால் இப்போது அந்த நிகழச்சியை மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வருகின்றனர்.
இந்த முறை, முன்பை விட வித்தியாசமான காமெடிகளுடன் நேயர்களை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கப்போகிறார்களாம். அதற்காக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் காமெடியன்களை கொண்டு வந்து மேடை ஏற்றும் விஜய் டிவியினர், தற்போது அந்த நிகழ்ச்சியை படம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்கிறார்கள்.