தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இதில் ஆர்யா, அனுஷ்கா, லட்சுமி மஞ்சு, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். பிவிபி சினிமா தயாரிக்கிறது. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடியின் மனைவி கனிகா தில்லான் கோவிலமுடி ஒரு பார்ட்டி வைத்தார். இது காஸ்ட்யூம் பார்ட்டி. ஹாலிவுட்டில் தான் இதுபோன்ற பார்ட்டிகள் நடக்கும். பார்ட்டிக்கு வருகிறவர்கள் ஏதாவது புகழ்பெற்ற சினிமா கதாபாத்ததிரங்கள் போல் மாறுவேடமணிந்து வரவேண்டும்.
நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த பார்ட்டியில் அனுஷ்கா மெலிபிசண்ட் என்ற ஹாலிவுட் படத்தில் ஏஞ்சலினா ஜூலி அணிந்த காஸ்ட்டியூமில் வந்தார். படத்தின் தயாரிப்பாளர் பி.வி.பொட்லூரி ஸ்டைபர் மேன் உடையில் வந்தார். லட்சுமி மஞ்சுவும், ராணாவும் டாம் ரைடர் காஸ்ட்யூமில் வந்தார்கள். ஆர்யா மட்டும் மிஸ்சிங். விடிய விடிய கூத்தும் கும்மாளமுமமாக நடந்து முடிந்தது பார்ட்டி.