ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் நடிகர்கள் மட்டும்தான் நடித்தார்கள். அதன்பிறகு ஒரு கட்டத்தில் சில இயக்குனர்களே ஹீரோ ஆனார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் ஹீரோக்களை நாடி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில், சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட சிலர் நடிகர்களாகி விட்டனர். இதில் ஜி.வி.பிரகாஷை எடுத்துக்கொண்டால், அவர் முதலில் பென்சில் என்ற படத்தில்தான் நாயகனாக நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக வரவில்லை. அதனால்தான் இப்போதுவரை அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
அதற்கடுத்து அவர் நடித்த டார்லிங் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனால் இப்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறார். குறிப்பாக முதல் இரண்டு படங்களிலும் ஸ்ரீதிவ்யா, நிக்கி கல்ராணியுடன் நெருக்கமான காட்சிகளில் தயங்கி தயங்கி நடித்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் கயல் ஆனந்தியுடன் எந்தவித கூச்சமும் இல்லாமல் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.