Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகசிய கதை விவாதத்தில் இயக்குனர் ஷங்கர்

27 ஜூன், 2015 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Shankar-in-secret-story-discussion

'எந்திரன் 2' படத்திற்காக ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ள ஷங்கர் தீவிரமான ரகசிய கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கரின் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகவே அந்தப் படத்திற்கான கதை உருவாக்க முயற்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட ஷங்கரின் உதவி இயக்குனர்கள் பலர் ஈடுபட்டிருந்தனராம். இப்போது கதை விவாதம் முழுமையாக உருப்பெறும் விதத்தில் அனைவரது தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று ரகசியமான ஒரு இடத்தில் கதை விவாதம் நடந்து வருகிறதாம்.


ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன், உதவி இயக்குனர்கள் உட்பட பலர் அதில் கலந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாக தன் படங்களின் கதை விவாதங்களில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார். கடைசியாக வெளிவந்த 'லிங்கா' படத்திலும் கே.எஸ்.ரவிக்குமாருடனும் ரஜினிகாந்த் விவாதத்தில் கலந்து கொண்டார். ஆனால், ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் ரஜினிகாந்த் இதுவரை கதை விவாதத்தில் கலந்து கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. இதனிடையே பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தின் கதை விவாதத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையான பிறகு அவர் ஷங்கரிடம் மொத்த கதையையும் கேட்பார் என்றும் சொல்கிறார்கள்.


அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான படங்களில் ரஜினிகாந்தைப் பார்க்கப் போவது மட்டும் உறுதி என்று கோலிவுட்டில் செய்தி பரவிக் கிடக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in