ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்த், என் தந்தையைப் போன்றவர். அவருடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால், அவருடன், டூயட் பாடுவது குறித்து நினைத்து கூட பார்க்க முடியவில்லை, என, பிரியாணி படத்தில் நடித்த, மாண்டி தாக்கர் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, பிரியாணி படத்தில், மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் மாண்டி தாக்கர், 29. இவர், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி:எனக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது. அதனால் தான், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்கும்போது, வசனங்களை மனப்பாடம் செய்து, அசத்தலாக பேசி நடிக்கிறேன். நடிகர் ரஜினிகாந்துடன்,64, நடிக்க வேண்டுமென அனைத்து நடிகைகளும் விரும்புவதை போல், நானும் விரும்புகிறேன். ஆனால், அவருக்கு ஜோடியாக, அவரை காதலிக்கும் வேடத்தில் நடிக்க மாட்டேன். ரஜினி, அமிதாப் போன்ற நடிகர்களை என் தந்தையைப் போல் நினைக்கிறேன். இதனால், அவர்களுடன் டூயட் பாடுவது பொருத்தமாக இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.