டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சண்டக்கோழி 2 படத்தில் முன்னணி நடிகை இருக்க இருப்பதாக, நடிகர் விஷால், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில், விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படம், விஷாலுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கதை, நடிப்பு, இசை , பாடல் என எல்லா பிரிவுகளிலும் படம், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம், விஷாலை, ஆக்ஷன் ஹீரோ அளவிற்கு இட்டுச்சென்றது.
தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில், பாயும் புலி படத்தில் நடித்து வரும், விஷால், இதற்கு பிறகு, லிங்குசாமி இயக்கத்தில், சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக, சமந்தா நடிக்க உள்ளதாக ஒரு தரப்பும், தமன்னா நடிக்க உள்ளதாக மற்றொரு தரப்பும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், விஷால், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, சண்டக்கோழி 2 படத்தில், முன்னணி நடிகை நடிக்க உள்ளார். செய்திகளில் வெளியாகியுள்ளதுபோன்று, தமன்னாவோ, சமந்தாவோ படத்தில் நடிக்கப்போவதில்லை என்று விஷால் அதில் குறிப்பிட்டுள்ளார்.