பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகன் அழகி, வேல்முருகன் போர்வெல்ஸ், இரிடியம் ஆகிய படங்களில் நடித்தவர் ஆருஷி. கன்னட நடிகையான இவர் அதன்பிறகு அடித்தளம் என்ற படத்தில் அங்காடித்தெரு மகேசுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. அதனால் தற்போது தெலுங்கில் ஹீரோயின் மிஸ்ஸிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்தே தீருவேன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது சென்னை வந்து சில முன்னணி இயக்குனர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வருகிறார் ஆருஷி. அப்படி அவர்களை சந்திக்கும்போது, இதுவரை டீசன்டான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. கதைக்கு தேவையென்றால் எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் பட வாய்ப்பு என்றால் சம்பளம் வாங்காமல் நடிக்கக்கூட தயாராக இருக்கிறேன் என்றும் கூறி வருகிறாராம் ஆருஷி.