Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாறும் ஜீவா

25 ஜூன், 2015 - 18:09 IST
எழுத்தின் அளவு:
Jeeva-in-his-own-hair-style

'யான்' படத்தின் படு தோல்விக்குப் பிறகு துவண்டுபோயிருந்த ஜீவா தற்போது மீண்டு வந்தது மட்டுமல்ல 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாகவும் இருக்கிறார். கருணாஸ் நடித்த 'அம்பா சமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து 'திருநாள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், 'யாமிருக்க பயமே' டீகேயின் இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்திலும் நடிக்கவிருக்கிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


இந்தப் படத்தில் ஜீவாவின் கேரக்டர் செம யூத்தாக மட்டுமல்ல, 'யூத்' பட விஜய்யின் கேரக்டரைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகவிருக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுக்கும் சமையல்கலை நிபுணர் (Chef) வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சமீபத்தில் ஜீவாவும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்ட ஃபோட்டோஷூட் இப்படத்திற்காக நடைபெற்றுள்ளது. 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. திருநாள் படத்துக்காக 80களில் உள்ளது போன்ற ஹேர்ஸ்டைல் வைத்துள்ள ஜீவா 'கவலை வேண்டாம்' படத்திற்காக விரைவில் தன் ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாற இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in