தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்துவிட்டார். தற்போது இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். கூடவே கருணாகரன் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். ரவிகுமார் இயக்க, சிவி குமார் தயாரித்துள்ளார். டைம் மிஷனை பற்றிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. வௌ்ளியன்று படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் பற்றி விஷ்ணு நம்மிடம் கூறியதாவது, வழக்கமாக ஹீரோ-ஹீரோயின் டூயட், வௌிநாட்டு பாடல் என்று நாம் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் ஒரு அறிவியல் சார்ந்த படம் ''இன்று நேற்று நாளை''. படத்தில் என் பெயர் இளங்கோ. புதிது புதிதாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருப்பவன், ஆனால் நான் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் எனக்கு தோல்வியைத் தான் கொடுக்கும். எனது நண்பராக கருணாகரன், ஒரு ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
எங்களுக்கு ஒரு டைம் மிஷன் கிடைக்கிறது. எங்க அறிவுக்கு எட்டிய வரை அதை நாங்கள் என்ன செய்கிறோம். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமை, பிரச்னைகள் என்ன என்பது தான் படத்தின் கதை. காதல் கதையையும், பேய் கதையையும், காக்கிச்சட்டை கதையையும் பார்த்து வந்த நமக்கு இந்த டைம் மிஷன் கதை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஆரம்ப காட்சியில் எதிர்கால சென்னை எப்படியிருக்கும் என்பதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு படமாக்கியிருக்கிறோம். மேலும் படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோல் செய்துள்ளார். அதுவும் எங்களுக்கு ப்ளஸ் தான் என்றார் விஷ்ணு.