ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில் சின்ன பாப்பாவாக நடித்து வருகிறார் சித்து. தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வளர்ந்தவர். சமீபத்தில் அவருக்கு அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதை மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொகுப்பாளினி நான் விரும்பி தேர்வு செய்த வேலை. நடிப்பு பொழுதுபோக்கிற்காக நான் தொடங்கியது. இப்போது அதுவே முழு நேர வேலையாகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியை தொகுக்கும்போதும், ஒரு சீரியலில் நடிக்கும்போது செய்யப்போகிற வேலையை தெளிவாக புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இதுவரை செய்து வருகிறேன். இப்போது அனுபவம் வாய்ந்த நளினி, நிரோஷாவுடன் போட்டிபோட்டு நடிப்பதை பார்த்து சினிமாவிலும் நடிக்க அழைத்தார்கள். அஜீத் படத்தில்கூட நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் சினிமாவில் நடிப்பதை என் பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் விருப்பத்தை மீறி இதுவரை எதுவும் செய்ததில்லை. அதனால் நடிக்கவில்லை என்கிறார் சித்து.