பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே ட்விட்டரில் சுமார் 79 லட்சம் பாலோயர்களைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நீண்ட காலமாக ட்விட்டரில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தினந்தோறும் ட்வீட் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார். ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளவர் ரஜினி.
கடந்த வருடம் 'கோச்சடையான்' பட வெளியீட்டை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்தார் ரஜினிகாந்த். ரஜினி ட்விட்டரில் இணைந்ததை முன்னிட்டு, ட்விட்டர் தள நிர்வாகமே தங்களுடையே முதல் பக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் புரொஃபைலை வைத்து அவரை கௌரவித்தது. ரஜினி ட்விட்டருக்கு வந்தபோது, பிரதமர் மோடி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பலபேர் ரஜினியை டிஜிட்டல் உலகத்திற்கு வரவேற்றனர். அன்று தொடங்கிய ரஜினியின் ட்விட்டர் பயணத்தில் தற்போது 20 லட்சம் ஃபாலோயர்ஸ் என்ற உச்சத்தை எட்டியிருக்கிறார் ரஜினி. இத்தனைக்கும் இந்த 15 மாதங்களில் ரஜினி மொத்தமே 12தான் செய்திருக்கிறார். ஆனாலும் ரஜினியை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!
ரஜினி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு அதிக அளவிலான பாலோயர்களைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் த்ரிஷா, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுக்கு சுமார்10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.