ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அனுஷ்கா இரு விதமான தோற்றங்களில் நடிக்கப் போகிறார். ஒரு தோற்றத்தில் குண்டானப் பெண்ணாகவும், மற்றொரு தோற்றத்தில் 'சைஸ் ஜீரோ' என்று சொல்லக் கூடிய அழகுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களைப் போன்று மிக ஒல்லியான தோற்றத்துடனும் நடிக்கப் போகிறார்.
குண்டான தோற்றத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா இப்போது கண்டபடி சாப்பிட்டு வருகிறாராம். அதே சமயத்தில் உடலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அனுஷ்காவுக்கு ஆர்யாதான் ஆலோசனை சொல்லி வருகிறார் என்கிறார்கள். ஆர்யா, இந்தப் படத்தின் கதைப்படி உடற்பயிற்சியாளராக நடிக்கிறாராம். நிஜ வாழ்க்கையிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் பல பயிற்சிகளை செய்து வரும் ஆர்யா, இயக்குனருக்கும் கதையில் பல ஆலோசனைகளை செய்து வருகிறாராம். அவருடைய யோசனைகளையும் ஏற்றுக் கொண்டு இயக்குநர் சில காட்சிகளை படத்தில் வைத்துள்ளாராம்.
அனுஷ்காவே சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் யோகா பயிற்சியாளராகத்தான் இருந்துள்ளார். இருந்தாலும் ஆர்யாவின் ஆலோசனைகளையும் அனுஷ்கா தவறாமல் கடைபிடித்து வருகிறாராம். 'இரண்டாம் உலகம்' படத்தில் இழந்த வெற்றியை இந்தப் 'இஞ்சி இடுப்ழகி' படத்தில் எப்படியும் பெற்று விட வேண்டும் என்று ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்து மிரட்டி வருகிறார்களாம்.