வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் பாலா தனது மனைவியை விவாகரத்து பண்ண இருப்பதாக வந்த தகவல்களை வெளியிட்டோம். இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர், கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான் அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். அம்ருதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு.
நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்கள் மண வாழ்க்கையில், அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்தபின் தான் புயல் வீச தொடங்கியதாம். அதன்பின் சின்னசின்ன காரனங்களை சொல்லி, தனது தந்தை வீட்டிற்கு குழந்தை அவந்திகாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாராம் அம்ருதா. இந்த ஆறு மாதங்களில் மிகுந்த சிரமத்துக்கு இடையே, ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே தனது மகளை சந்திக்க பாலாவால் முடிந்ததாம்.