தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் இளம்தேவதை காத்ரீனா கைப், ஜாக்கி சானுடன் இணைந்து "குங் பூ யோகா" என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.
பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிய காத்ரீனா கைப், இப் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலும் தடம்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த படத்தில் நடிக்க காத்ரீனா கைப்பிற்கும், நீத்து சந்திராவிற்கும் இடையே கடும்போட்டி நிலவியது. இறுதியில், ஜாக்கி சானுடன் நடிக்கும் வாய்ப்பை காத்ரீனா கைப் தட்டிச் சென்றுள்ளார்.
இப்படம் தொடர்பாக, காத்ரீனா கைப் ரசிகர்களுக்கும், நீத்து சந்திரா ரசிகர்களுக்கும் இடையே பெரும் விவாதமே நடைபெற்றிருந்தது.
இந்திய டேக்வோண்டா விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடரான நீங்கள், தற்காப்புக்கலை குறித்த படத்தில் நடிக்காதது வருத்தமளிப்பதாக, நீத்து சந்திராவின் ரசிகர் டுவிட்டரில் குறிப்பி்ட்டிருந்ததற்கு, பதிலளித்துள்ள நீத்து சந்திரா கூறியதாவது, காத்ரீனா, என்னைவிட திறமை மிக்கவர். அவர் முன்னணி நட்சத்திரங்களான சல்மான் கான் மற்றும் ஷாரூக் கானுடன் இணைந்து நடித்துள்ளார் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் தன்மேல் வைத்துள்ள அன்பிற்கு நன்றி என அதில் நீத்து சந்திரா குறிப்பிட்டுள்ளார்.