தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர்(வயது 61), விமான விபத்தில் பலியானார். ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர். தி லேடி ரெட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹார்னர், டைட்டானிக், பிரேவ் ஹார்ட், ஏ பியூட்டிபுல் மைண்ட், அப்பல்லோ 13, ஹவுஸ் ஆப் சாண்ட் அண்ட் பாக், அவதார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இதில் டைட்டானிக் படத்தில் சிறந்த இசையமைப்புக்காக ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார், இதுதவிர கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதும் பெற்றுள்ளார். இவர் இசையமைத்த படங்கள் 11 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்த வந்த ஜேம்ஸ் ஹார்னர் சொந்தமாக சிறிய ரக விமானம் ஒன்று வைத்துள்ளார். திங்கள் அன்று, தனது விமானத்தை தனியாக ஓட்டி சென்றுள்ளார். சாண்ட்டா பார்பரா என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஜேம்ஸ் ஹார்னர் பலியானார். விபத்து எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை, இதுப்பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜேம்ஸ் ஹார்னரின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.