ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் படம் ஜின். அவருடன் ரமீஸ், ப்ரீத்தி, காளிவெங்கட், மூனீஸ்காந்த் அர்ஜுனன் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: நான் சினிமா ஆர்வத்தில் குறும்படங்கள் இயக்கி வருகிறேன். ஒரு சினிமாவிற்கு கதை எழுதலாம் என்று நண்பர்களை அழைத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்ஸ்சுக்குச் சென்றேன். அன்று பகல் முழுவதும் கதை பற்றி விவாதித்தோம். இரவில்தான் அந்த பயங்கரம் நடந்தது. ஒருவனை யாரோ இழுத்துக் கொண்டு போய் நீச்சல் குளத்தில் போட்டார்கள், இன்னொருவனை பாத்ரூமில பூட்டி கதவடைத்தார்கள், அடுத்து ஒருவனை பீச்சு வரை கூட்டிச் சென்றிருக்கிறார்கள். என்னை யாரோ முதுகில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். மறுநாளே ரெஸார்ட்சை காலி செய்தோம்.
கிண்டல் செய்வார்களோ என்று பயந்து யாரும் தங்களுக்குள் நடந்ததை பகிர்ந்து கொள்ளவில்லை. முதன் முறையாக நான் சொன்னேன். என்னைத் தொடர்ந்து எல்லோரும் சொன்னார்கள். இதுகுறித்து ரிசார்ட்சில் விசாரித்தபோது இதுவரை அப்படி நடக்கவில்லை என்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் குடும்பத்திடம் சொன்னபோது எங்கள் அனைவரையும் வரச் சொன்னார்கள். எங்ளை பார்த்த அவர்கள் உங்களில் ஒருவருக்குள் ஜின் இருக்கிறது என்றார்கள். அதாவது கெட்ட ஆவி இருக்கிறது என்றார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு அது யாருக்குள் இருக்கிறது என்று கண்டிபிடித்து பின்பு அதனை உரிய வழியில் போக்கினோம். எங்களின் இந்த பேய் அனுபவத்தை அப்படியே சினிமாவாக எடுத்து விடுவது என்று முடிவு செய்து எடுத்தோம். சென்னையில் வால்பாறையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது என்றார் சதீஷ் சந்திரசேகரன்.