தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது தனது பாகுபலி படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள இப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாகுபலி படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றானர். பாகுபலி படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் திரைக்கு வருகின்றது. ஹிந்தி பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபாஸ் ஹிந்தி படங்களில் நடிக்க விரும்பும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல கதை அம்சம் கொண்ட ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் எனில் அதுவே தனது முதல் ஹிந்தி படமாக அமையும் என்று பிரபாஸ் கூறியுள்ளார். பாகுபலி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் இயக்குநர் சுர்ஜித் இயக்கும் படத்திலும், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.