ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவரை தரக்குறைவாக விமர்சித்தலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜயின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு இனிய செய்தியாக, புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜயையும், அவரது ரசிகர்களையும் கிண்டலடிக்கும் விதமாக, அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #VijayTheCurseOfCinema என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
விஜய் அல்லது அஜித் அவர்களின் உண்மையான ரசிகன், இத்தகைய காரியத்தை செய்ய மாட்டான். இதுபோன்ற உங்களது நடவடிக்கைகள், உங்கள் அபிமான நடிகர்களுக்கே, பாதகமாக முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது என்று சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.