ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்குமான மோசமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று விஜய் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாளிலும் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'புலி' டீசரை விமர்சித்தும், விஜய் படங்களைப் பற்றி விமர்சித்தும் தரக்குறைவான பல கமெண்ட்டுகளையும், மீமீக்களையும் போட்டு வருகிறார்கள்.
#VijayTheCurseOfCinema என்ற ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி கடந்த சில மணி நேரங்களாக அதை இந்திய அளவில் டிரென்டிங்கிலும் வரவழைத்துவிட்டனர். சில கமெண்ட்டுகள் மிகவும் கூனிக் குறுகும் அளவிற்கு இருக்கிறது. பொதுவாக அஜித் படம் வெளிவந்தால் விஜய் ரசிகர்களும், விஜய் படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்களும் மோதிக் கொள்வதும் வழக்கமானதுதான். டீசர், டிரைலர் வெளிவந்தாலும் அவர்கள் இப்படித்தான் அடித்துக் கொள்வார்கள்.
ஆனால், பிறந்த நாளில் கூட அந்த சண்டையைத் தொடர்வது கேலிக்குரியதாகவே இருக்கிறது. அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எப்போதோ களைத்து விட்டார். அப்படியே, இப்படி தரம் மீறி கமெண்ட்டுகளைப் போடும் தன்னுடைய ரசிகர்களையும் சேர்த்து கண்டிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனால் அவருடைய ரசிகர்களின் பெயரும் கெடுவது போதாதென்று அஜித்தின் பெயரும் சேர்ந்து கெட வாய்ப்புள்ளது. உடனே அஜித் இதைக் கவனிப்பாரா என்பதே நடுநிலை ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.