மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புலி படத்தின் டீசர் மொத்தம் 55 வினாடிகள் ஓடுவதுபோல் வெளியிடப்பட்டுள்ளது. புலி படம் தொடங்கப்பட்டபோது, படத்தின் கதை இரண்டு காலக்கட்டத்தில் கதை நிகழ்வதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட டீசரில் முழுக்க முழுக்க மன்னர் யுகத்தில் நடைபெறும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இரும்புக்கவச முகமூடி அணிந்த வீரர்கள், பிரம்மாண்ட கோட்டைகள், அரண்மனைகள், ராணியாக ஸ்ரீதேவி, தளபதியாக சுதீப், கலர்ஃபுல் ஹன்சிகா, அட்டகாசமான ஸ்ருதிஹாசன் என மன்னர்காலத்தில் நடைபெறும் காட்சிகளை தொகுத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த டீஸர்.
விஜயின் அறிமுகம் சந்தேகமில்லாமல் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.
கிராப் ஹேர் ஸ்டைல், பிரெஞ்ச் தாடி, புளு கலர் கான்டாக்ட் லென்ஸில், தோன்றி இருக்கிறார் விஜய். மன்னர் யுகத்தில் கிராப் ஹேர் ஸ்டைல், கான்டாக்ட் லென்ஸ், பிரெஞ்ச் தாடியா? என்ற லாஜிக் கேள்விகளை எழுப்பி நக்கல் அடிக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த கேள்விகளுக்கு விடையாக, ''விஜய் தற்போதைய காலகட்டத்திலிருந்து, மன்னர் யுகத்திற்கு டைம் மெஷின் மூலம் பயணம் செய்பவராக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவருடைய கேரக்டர் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள் 'புலி' படக்குழுவை சேர்ந்தவர்கள்.
இந்த வாரம் வெளிவரவிருக்கும் இன்று நேற்று நாளை படமும் டைம்மிஷினை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான்.
புலியும் டைம்மெஷின் படம் என்றால்... எங்கேயோ இடிக்கிறதே....