தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கழுகு பிந்து மாதவிக்கு சமீபகாலமாக மார்க்கெட் நிலவரம் சரியில்லை. கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜாவுக்கு பிறகு ஆட்டம் கண்டது அவரது மார்க்கெட். இருப்பினும் அவ்வப்போது ஒரு படம் வெளியாகி அவரது மார்க்கெட் இன்னும் சுத்தமாக அவுட்டாகவில்லை என்று ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கியுள்ள ஹைக்கூ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் பிந்துமாதவி. என்றாலும், அது பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களுக்கான படம் என்பதால், தன்னை அந்த படம் காப்பாற்றுமா? என்று சந்தேகமும் பிந்துமாதவிக்கு ஏற்பட்டுள்ளதாம். இந்த நேரத்தில்தான் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படமான ஜாக்சன் துரையில் நடித்தபோது ஒருநாள் அப்படத்தின் நாயன் சிபிராஜிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த படம் பெரிய ஹிட்டாக அமையும் கவலை வேண்டாம் என்றாராம். அதோடு, இது வழக்கமான பேய் படமல்ல, ஹாலிவுட்டுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. அதனால் படம் ஹிட்டாவது உறுதி என்றும் பிந்துமாதவிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளாராம் சிபிராஜ்.