Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சதம் கண்ட அரையாண்டு சாதனை - ஒரு பார்வை

21 ஜூன், 2015 - 15:19 IST
எழுத்தின் அளவு:
100th-movie-of-this-year-2015

2015ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் கண்டிப்பாக ஒரு சாதனை ஆண்டாக இருக்கப் போவது மட்டும் உறுதி. 1931ம் ஆண்டு ஆரம்பமான தமிழ் சினிமா வரலாற்றில் இந்த 84 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே ஆண்டில், ஆறு மாதங்களுக்குள் வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட்ட சிறப்பு இந்த 2015ம் ஆண்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.


ஒரு வாரத்திற்கு சராசரியாக நான்கு படங்கள் வெளிவந்து இந்த 2015ன் இந்த 25 வாரங்களுக்குள் 100 படங்கள் வெளிவருவது சாதாரண விஷயமல்ல. ஒரு பக்கம் தமிழ் சினிமா நசுங்கிக் கொண்டிருக்கிறது சில படங்களின் வசூல் லட்சத்தைக் கூடத் தாண்டவில்லை என்ற குரல் ஒரு பக்கம், மறுபக்கம் பல கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படங்கள், நடிகர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் என முரண்பாடுகளின் மொத்த உருவமாக தமிழ் சினிமா வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.


ஆறு மாதம் முழுதாக முடிய இன்னும் ஒரு வெள்ளிக்கிழமை இருக்கும் நிலையில் 100 படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அந்த 100 படங்களில் எத்தனை படங்கள் 100 நாட்களைத் தொட்டது என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது. உண்மையிலேயே ஒரு படம் கூட 100 நாள் ஓடவில்லை. மாறாக 500, 600 திரையரங்குகளில் வெளியாகிய சாதனையைத்தான் புரிந்திருக்கிறது. இன்று எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பது சாதனை அல்ல, எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பதுதான் சாதனை.


2015ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்திலேயே இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த 'ஐ' படம் வெளிவந்தது. மீண்டும் தன்னுடைய பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை 'ஆ' என ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தார் ஷங்கர். நடிப்பிற்காக ஒரு நடிகனால் இப்படியும் கூட இளைக்க முடியுமா என தன்னுடைய ஈடுபாட்டை வெளிப்படுத்தினார் விக்ரம். 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் மிகப் பெரும் லாபத்தைத் தரவில்லை என்றாலும் நஷ்டத்தைத் தரவில்லை என்றுதான் சொன்னார்கள்.


ஆச்சரியமான எதிர்பாராத வெற்றியைப் பெற்றப் படமாக 'டார்லிங்' படம் அமைந்தது. இசையமைப்பாளராக வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டு வரும் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான 'டார்லிங்' படம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றி இன்று ஜி.வி.பிரகாஷைத் தேடி பல இயக்குனர்களைப் போக வைத்துள்ளது.


தமிழ்த் திரையுலகின் இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்க கௌதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படம் பல எதிர்பார்ப்புகளுடன் வந்தது. அரைத்த மாவையே அரைத்து இந்தப் படத்தை கௌதம் கொடுத்திருந்தாலும் ஒரு ஏமாற்றமான படத்தைத் தந்துவிடாமல் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்தப் படம் யாருக்கு உதவியதோ இல்லையோ, த்ரிஷாவை மீண்டும் பிஸியான ஹீரோயினாக்கிவிட்டது.


கடந்த ஆண்டில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் லாபகரமான நாயகனாக வலம் வந்த தனுஷ் - இயக்குனர் கே.வி.ஆனந்த் இணைந்த 'அனேகன்' படத்தைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தவிர யாருமே லாபமான படம் என்று சொல்லவில்லை.


அடுத்த வாரத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' கொஞ்சமே கொஞ்சம் லாபத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயனை ரசிகர்கள் சீரியான ஹீரோவாகப் பார்க்க விரும்பவில்லை என்று இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் உணர்த்தினார்கள். அது சிவகார்த்திகேயனுக்கும் புரிந்திருக்கும்.


'மெட்ராஸ்' படம் மூலம் இழந்து போன தன்னுடைய மார்க்கெட்டை மீட்டெடுத்த கார்த்தி, 'கொம்பன்' படம் மூலம் மீண்டும் கோட்டையாகக் கட்டிவிட்டார். கிராமத்துப் படங்களை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை என்று இந்தப் படத்தின் வெற்றி நிரூபித்தது.


2015ம் ஆண்டின் அரையாண்டில் அட்டகாசமான 'கலெக்ஷன்' படம் என 'காஞ்சனா 2' தட்டிச் சென்றது. 100 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியது என்று சொன்னார்கள். அவ்வளவு வசூல் வந்ததோ இல்லையோ தெரியாது, இந்தப் படத்தை வாங்கிய அனைத்து தியேட்டர்காரர்களின் 'கவுன்ட்ர்கள்' நிரம்பி வழிந்து அவர்களது கல்லாவும் நிறைந்தது என்பது மட்டும் உண்மை.


தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்த டிரன்ட் செட்டரான மணிரத்னம், மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுக்க மாட்டாரா என்ற அவரது ரசிகர்களுக்கு நிறைவைக் கொடுத்த படமாக 'ஓ காதல் கண்மணி' படம் அமைந்தது.


உலகத் தரத்தில் தமிழ்ப் படத்தைக் கொண்டு செல்லக் கூடிய ஒரே கலைஞன் என்ற பெயரைப் பெற்ற கமல்ஹாசன், மீண்டும் ஒரு கேள்விக்குரிய 'உத்தம வில்லன்' படத்தை எடுத்து தயாரிப்பாளரையும் தவிக்க வைத்து, தன்னுடைய நிலையையும் தத்தளிக்க வைத்து விட்டார். இப்படி ஒரு கதையை அவர் எப்படி யோசித்தார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.


ஒரு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னார் ஓராயிரம் ரூபாய்க்கும் மேல் நடிக்கக் கூடிய ஜோதிகா திருமணம் முடிந்து குழந்தைகளைப் பெற்ற பின் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்து, ஒரு வெற்றிப் படத்தையும் தந்துவிட்டார். நாயகர்கள் இல்லாமல் கூட ஒரு படம் ஜெயிக்க முடியும் என்பதை '36 வயதினிலே ' படம் மூலம் நிரூபித்தார்.


எத்தனையோ பேய்ப் படங்கள் வந்தாலும் எல்லா பேய்ப் படமுமே வெற்றி பெறுவதில்லை. ஒரு சில படங்களே வெற்றி பெறுகின்றன. அப்படி ஒரு வெற்றியைக் கொடுத்த படம் 'டிமான்ட்டி காலனி'. நாயகியே இல்லாத ஒரு படம் பெற்றி முக்கிய வெற்றி, இந்தப் படத்திற்குக் கிடைத்தது.


நகைச்சுவை நடிகரான சந்தானம் தனி ஹீரோவாக முதன் முறையாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது என்கிறார்கள். நூலிழையில் சந்தானம் தப்பிவிட்டார். ஆனால், பொறிக்குள் சிக்கிய 'எலி'யாக மற்றொரு நகைச்சுவை நடிகரான வடிவேலு 'எலி' படம் மூலம் மாட்டிக் கொண்டார். வடிவேலு இதுவரை நடித்தப் படங்களிலேயே இப்படி ஒரு மோசமான படத்தைக் கெடுத்திருக்க மாட்டார் என்று ஒட்டு மொத்தமாக அனைவரும் சொன்ன படம்.


விஷால், சித்தார்த், ஜெய், உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன், கௌதம் கார்த்திக், ஆர்யா, விஜய் சேதுபதி, சூர்யா என தமிழ்த் திரையுலகின் கடந்த சில வருடங்களின் முக்கிய நடிகர்கள் இந்த அரையாண்டில் நிறையவே ஏமாற்றி விட்டார்கள்.


ஆனால், அந்த நடிகர்கள் செய்யாத சாதனையை இரண்டு சிறுவர்கள் 'ரமேஷ், விக்னேஷ்' மிகப் பெரும் சாதனையாகச் செய்திருக்கிறார்கள். இரண்டு தேசிய விருதுகள் மட்டும் இந்தப் படத்திற்குப் போதாது என 'காக்கா முட்டை' படத்தைப் பார்த்த சாதாரண ரசிகர்களும் சொல்வது உண்மைதான். மணிகண்டன் என்ற அந்த அறிமுக இயக்குனரின் வந்தப் படத்தில் தமிழ் சினிமா நிறையவே தலை நிமிரும் என்ற மாபெரும் நம்பிக்கை ஏற்பட்டது.


இதுவரை வந்த 100 படங்களில் 10 படங்கள்தான் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது சோகமான உண்மை. இருந்தாலும் அடுத்த அரையாண்டில் அளப்பரிய சாதனைகளைப் புரியும்படியான படங்கள் வராதா என்ற ஏக்கத்துடன் காத்திருப்போம்.


2015 - அரையாண்டுப் படங்களின் பட்டியல்...


1 திரு.வி.க பூங்கா 2 விருதலாம்பட்டு 3 விஷயம் வெளியே தெரியக் கூடாது 4 வேட்டையாடு 5 கிழக்கே உதித்த காதல் 6 ஐ 7 ஆய்வுக் கூடம் 8 ஆம்பள 9 டார்லிங் 10 அரூபம் 11 அப்பாவி காட்டேரி 12 தொட்டால் தொடரும் 13 புலன் விசாரணை 2 14 டூரிங் டாக்கீஸ் 15 கில்லாடி 16 தரணி 17 இசை 18 என்னை அறிந்தால் 19 பொங்கி எழு மனோகரா 20 அனேகன் 21 மண்டோதரி 22 மனித காதல் அல்ல 23 கதிர் கஞ்சா கருப்பு 24 சண்ட மாருதம் 25 தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் 26 வஜ்ரம் 27 மணல் நகரம் 28 எட்டுத் திக்கும் மதயானை 29 காக்கி சட்டை 30 பெஞ்ச் டாக்கீஸ் 31 என் வழி தனி வழி 32 எனக்குள் ஒருவன் 33 ஜேகே எனும் நண்பனின் 34 மகா மகா 35 ரொம்ப நல்லவன்டா நீ 36 சேர்ந்து போலாமா 37 தொப்பி 38 ஐவராட்டம் 39 இவனுக்கு தண்ணில கண்டம் 40 கதம் கதம் 41 மகாபலிபுரம் 42 ராஜதந்திரம் 43 சொன்ன போச்சு 44 தவறான பாதை 45 வானவில் வாழ்க்கை 46 ஆயா வடை சுட்ட கதை 47 அகத்திணை 48 இரவும் பகலும் வரும் 49 கடவுள் பாதி மிருகம் பாதி 50 கள்ளப்படம் 51 காலகட்டம் 52 மூச் 53 பட்ற 54 திலகர் 55 வெத்து வேட்டு 56 சார்லஸ், ஷபீக், கார்த்திகா 57 மனதில் ஒரு மாற்றம் 58 நதிகள் நனைவதில்லை 59 சரித்திரம் பேசு 60 வலியவன் 61 கொம்பன் 62 நண்பேன்டா 63 சகாப்தம் 64 சென்னை உங்களை 65 துணை முதல்வர் 66 ஓ காதல் கண்மணி 67 காஞ்சனா 2 68 கங்காரு 69 யூகன் 70 இரிடியம் 71 நீதானே என் கோவில் 72 வை ராஜா வை 73 உத்தம வில்லன் 74 இந்தியா பாகிஸ்தான் 75 எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் 76 நீயும் நானும் 77 காதல் இலவசம் 78 36 வயதினிலே 79 புறம்போக்கு என்கிற பொதுவுடமை 80 டிமான்ட்டி காலனி 81 கமர கட்டு 82 திறந்திடு சீசே 83 சிறுவாணி 84 நண்பர்கள் நற்பணி மன்றம் 85 விந்தை 86 மாஸ் 87 இருவர் ஒன்றானால் 88 சோன்பப்டி 89 கருத்தப் பையன் செவத்தப் பொண்ணு 90 காக்கா முட்டை 91 புரியாத ஆரம்பம் புதிதாக ஆரம்பம் 92 புத்தனின் சிரிப்பு 93 காத்தம்மா 94 தேகம் சுடுகுது 95 ரோமியோ ஜுலியட் 96 இனிமே இப்படித்தான் 97 இரு காதல் ஒரு கதை 98 இயக்குனர் 99 அச்சாரம் 100 எலி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in