Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பைக் கவர்ந்த பாகுபலி

21 ஜூன், 2015 - 12:33 IST
எழுத்தின் அளவு:

இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான பாகுபலி ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள பாகுபலி படத்தின் டிரைலரைப் பார்த்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ரானா டிரைலரை அமிதாப்பிற்கு காண்பித்துள்ளார். அதனை பார்த்து பிரமித்த அமிதாப், முதன் முறையாக ஒரு இந்திய திரைப்படத்தில் பிரமாண்டமான விஷுவல் எபெக்டுகளை பார்ப்பதாக பாராட்டியுள்ளார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கி வருகின்றார்.இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார்.பாகுபலி படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைக்கு வருகின்றது. இப்படத்தை ஹிந்தி பட இயக்குநர் கரன் ஜோஹர் வழங்க புளுஸ்கை நிறுவனம் திரையிடுகின்றது. ஜூலை 9 ஆம் தேதி இப்படத்திற்கான புரமோஷன் விழாவை பிரமாண்டமாக நடத்த கரன் திட்டமிட்டுள்ளார். இதில் பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்களுடன் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாருக்கான் மற்றும் பல ஹிந்தி திரைப்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in