பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அங்காடித்தெரு படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டவர் மகேஷ். திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்த இவர் அதையடுத்து, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், யாசகன், வேல்முருகன் போர்வேல், இரவும் பகலும் வரும், புத்தனின் சிரிப்பு ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால் அப்படி அவர் நடித்ததில் அங்காடித்தெரு தவிர எந்த படமும் ஓடவில்லை. இப்போது அடித்தளம், வெயிலோடு விளையாடு போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படங்களில் நடிப்பதற்கு 25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம் மகேஷ். ஆனால் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லாததை தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டினால், மார்க்கெட் இல்லை என்றாலும் நான் சினிமாவுக்கு வந்து 5 வருடமாகி விட்டது. மேலும், படங்கள் ஓடாததற்கு நான் எந்த வகையிலும் காரணமல்ல. என் வேலையை ஒழுங்காக செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லி தனது உழைப்புக்கான கூலியை தருமாறு கேட்கிறாராம் மகேஷ்.