அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாணா காத்தாடி சமந்தா, அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு மெகா நடிகையாகி விட்டார். தற்போது மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக நடித்து வரும் அவர், தனுசுடன் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் குடும்பப்பெண்ணாக கிராமத்து கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
நகரத்து பின்னணியிலேயே வளர்ந்த சமந்தா, இதற்கு முன்பு சிட்டி கதைகளிலேயே அதிகமாக நடித்திருப்பவர் இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக தனது நடை உடைகளை மாற்றி இயல்பாக நடித்திருக்கிறாராம். அதற்கு அந்த படத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ள ராதிகா அவருக்கு கிராமத்து டிப்ஸ் நிறைய கொடுத்தாராம்.
மேலும், இதுதவிர விக்ரமுடன் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சமந்தா, அதில் ஒரு வேடத்தில் நேபாளத்து பெண்ணாகவே நடித்திருக்கிறார். நேபாளம் பேசி நடிக்கும் இந்த வேடத்தில் நேபாளத்துக்கு பெண்களைப்போன்றே காஸ்டியூம் அணிந்து முழுமையாக தன்னை மாற்றி நடித்திருக்கிறாராம் சமந்தா. இந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட பாதி காட்சிகள் நேபாளத்தில் படமாக்கப்பட்ட நிலையில, மீதமுள்ள காட்சிகளை இன்னும் ஒரு வாரம் சென்னையில் நடத்துகிறார்களாம்.