Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதியவருடன் ஓவியா நடிக்கும் “சீனி”!

20 ஜூன், 2015 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Oviyas-new-movie-titled-as-Seeni

கே.சி.ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்.செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சீனி”. இயக்குநர்கள் மனோஜ் குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜதுரை என்பவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஸ்ரீகாந்ததேவா இசையில், E.K. நாகராஜன் ஒளிப்பதிவில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் சீனி படத்தின் கதை... “ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பொ¢ய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு வெற்றிடைந்தது? எப்படி தொழிலதிபர் ஆனான்.?! அவனுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது யார் யார்...?” என்பதே சீனி படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கருவும் களமும் கதையுமாகும்.


இந்த கதையை முழுக்க முழுக்க காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், சென்டிமெண்ட்டுடன் கூடிய ஜனரஞ்சகபடமாக உருவாக்கி இருக்கின்றனர். கதாநாயகியாக ஒவியா நடித்திருக்கிறார். கதாநாயகராக சஞ்சீவி எனும் இளைஞரும், காமெடிநாயகராக பரத்ரவி எனும் இளைஞரும் அறிமுகமாகிறார்கள். ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த, கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார், T.P.கஜேந்திரன், இயக்குநர்.மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவாலட்சுமணன், ரவி மாரியா, அருள்தாஸ்,நெல்லை ராயல்அம்பி, மகேந்திரன்,மீராகிருஷ்ணன் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களுடன் எம்.ஜி.ஆர்,கவுண்டமணி, ஆகிய பிரபலங்களும் இயக்குநரின் சாமர்த்தியத்தால் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அது எப்படி? என கேட்டால் சீனி படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்... அதுவரை சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர் ராஜ துரை.


இவர்களுடன் சீதா என்ற யானையும் சீனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் யானையாக சீனி படத்தில் வரும் சீதா யானை., நிஜத்தில் TVS கம்பெனி பாரமரிக்கும் யானையாகும். சீதா யானையின் பாகனாக இப்படத்தில் வீரபாகு எனும் பாத்திரத்தில் காமெடி நடிகர் செந்தில் இதுவரை ஏற்றிடாத கனமானதொரு கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார்.


“யானை பங்கு பெறுவதால் மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களால் “சீனி” படமும் தேவர் பிலிம்ஸ், தேனான்டாள் பிலிம்ஸ்... படங்களின் வரிசையில் தரமான படமாக இருக்கும்...” எனும் தயாரிப்பாளர் மதுரை R.செல்வம், “படத்தில் காதல் உண்டு... ஆனால் கவர்ச்சி எனும் பெயரில் ஆபாசம் துளியும் கிடையாது குடும்பத்தோடு பார்க்கும் படமாக சீனி நிச்சயம் இருக்கும்...” என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in