ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் கில்லிங் வீரப்பன் படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கி வருகின்றார். இப்படத்தில் கன்னட திரையுலக யங் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கின்றார். போலீசாக சிவராஜ்குமார் நடிக்கும் இப்படத்தில் வீரப்பனாக சுதீப் நடிக்கின்றார். வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி வேடத்தில் நடிகை யாக்னாஷெட்டி நடிப்பதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம் கோபால் வர்மா வெளியிட்ட இப்படத்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.