ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
இந்தி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, தெலுங்கில் பல படங்களில் நடித்த பிறகுதான் தமிழுக்கு வந்தார். தனுசுடன் மாப்பிள்ளை படத்திற்கு பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்தவருக்கு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு மார்க்கெட் சூடுபிடித்தது. அதனால் பின்னர், அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியது. ஆனால் அவரது அபிமான ஹீரோக்களான ரவி தேஜா, மஞ்சு விஷ்ணு உள்பட சில ஹீரோக்கள் மட்டும் ஹன்சிகாவை இழுத்துப்பிடித்து அவ்வப்போது தங்களது படங்களிலும் நடிக்க வைத்து வந்தனர். ஆனால், அதையடுத்து, ஹன்சிகா அவர்கள் கால்சீட் கேட்டபோதெல்லாம் தமிழில் பிஸி பிஸி என்று சொல்லிக்கொண்டிருந்ததால் இப்போது ஹன்சிகாவை ஆந்திர ஹீரோக்கள் யாருமே கண்டுகொள்வதில்லையாம். சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் ஐதராபாத் சென்றிருந்தபோதுகூட அங்கே வந்திருந்த தெலுங்கு ஹீரோக்கள் ஹன்சிகாவை கண்டும் காணாததுபோல்தான் இருந்தார்களாம். ஆக, தெலுங்கு சினிமா தன்னை இனிமேல் கண்டுகொள்ளாது என்பதை தெரிந்து கொண்ட ஹன்சிகா, தமிழில் இன்னும் அழுத்தமாக கால்பதித்து விட சரியான டைரக்டர்களிடம் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.