ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இனியாவைப் போன்று, சிருஷ்டி தாங்கேயும் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்தார். அதையடுத்து மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து பேசப்பட்டார். இந்த நிலையில், கத்துக்குட்டி, அச்சமின்றி, வருசநாடு, நவரச திலகம், ஆள் அம்பு, களகூத்து என பல படங்கள் தற்போது கைவசம் உள்ளன. ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்த சிருஷ்டி, ஒரு நொடியில் படத்தில் தனது கவர்ச்சியை வெளிச்சம் போட்டு விட்டதால், இப்போது தாராள கிளாமருக்கும் க்ரீன் சிக்னல் கொடுத்து வருகிறார். மேலும், நானும் தமன்னா, ஹன்சிகாவைப்போன்று மும்பையில் இருந்து வந்தவர்தான். அதனால் அவர்களைப்போன்று தமிழில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று கூறும் சிருஷ்டி தாங்கே, தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தபோதும், அடுத்த ரவுண்டில் மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பேன். அதற்கான முயற்சி நடக்கிறது என்கிறார்.