ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதுதான் ரசிகர்களுக்கு உண்மையான விருந்து. கடந்த 10 வருடங்களில் இப்படிப்பட்ட விருந்து அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைப்பதில்லை. குறைந்தது 300 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்... 3 நாளில்வசூலை அள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு ஹீரோவின் படம் வெளியிடப்படுகிறது. போட்டியே இல்லாமல் தனித்து களமிறங்கி காசு பார்க்கிறார்கள். இந்நிலையில் இளம் தலைமுறை நடிகர்களான சிம்புவும் தனுஷஷும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு நடித்த 'வாலு' படம் பல முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும், அந்த தேதிகளில் படம் ரிலீசாகவில்லை! 'வாலு'விற்கு வியாபார சிக்கல் ஏற்பட்டு வெளியாகாமல் காலதாமதமானதால் இப்படத்தை எப்பாடியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் முயற்சி எடுத்து வந்தார். இதனை தொடர்ந்து 'வாலு' படத்தை தனது 'சிம்பு சினி ஆர்ட்ஸ்' நிறுவனம் மூலம் ஜூலை 17-ஆம் தேதி வெளியிடுகிறார். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்புடன் 'வாலு' விளம்பரங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.
இதே தினம் ராதிகா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாரி' படமும் ரிலீசாக இருக்கிறது. திட்டமிட்டபடி வாலு மற்றும் மாரி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் சரித்திரம் திரும்பியதாக அர்த்தம். அதாவது, தனுஷ் நடித்த 'ட்ரீம்ஸ்' படமும், சிம்பு நடித்த 'மன்மதன் 'படமும் ஒரே நாளில்தான் அதாவது,கடந்த 2004, நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியானது. 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், சிம்பு படங்கள் ஒரே தினம் வெளியாகுமா பார்ப்போம்.