Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்

19 ஜூன், 2015 - 10:10 IST
எழுத்தின் அளவு:
Shaam-shares-that-he-romance-with-Manisha-Koirala

நடிகர் ஷாமுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. அவர் பல முன்னணி கதாநாயகிகள் பலருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் 25 படங்களில்தான் நடித்துள்ளார். ஏறக்குறைய எல்லா முன்னணி கதாநாயகிகளுடனும் நடித்துவிட்டார். ஜோதிகா, சிம்ரன், அசின், சினேகா, ப்ரியாமணி என்று நடித்து இப்போது மனிஷா கொய்ராலாவுடன் இணைந்துள்ளார். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ஒரு மெல்லிய கோடு படத்தில் தான் மனிஷாவுடன் நடிக்கிறார்.


மனிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றிக் கூறும் போது।.. "இது ஒரு புதுமையான வித்தியாசமான அனுபவம். என்னைவிட வயது அதிகமுள்ள நடிகையுடன் நடிப்பது புதுமை. கதைப்படியும் அப்படித்தான் இருக்கிறது. மனிஷா பெரிய நடிகை, இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்துள்ளவர். அவருடன் எப்படி நடிப்பது சீனியர் நடிகை என்று எனக்குள் ஒரு தயக்கமும் பதற்றமும் இருந்தது உண்மை. ஆனால் அவரோ மிகவும் புரொபஷனலாக இருந்தார் எளிமையாகப் பேசி எங்களிடையே இருந்த அசௌகரியத்தை போக்கினார். ஒரு கட்டத்தில், நாம் காதலர்கள், நெருங்கி நடிக்க வேண்டும், ரொமான்ஸ் பண்ண வேண்டும் இப்படி சங்கோஜப் பட்டால் எப்படி என்று கேட்டார். புரொபஷனலாக இருங்கள் என்றார்.


இப்படிப் பேசி என் கூச்சம், தயக்கத்தைப் போக்கினார் பிறகு இயல்பாகி விட்டேன். தான் நடித்தது அவருக்கத் திருப்தி வரவேண்டும். இயக்குநர் ஓகே என்று கூறிவிட்டால் கூட இன்னும் பெட்டராக செய்யலாம் என்று மீண்டும் ஒரு முறை நடிக்கிறார். இயக்குநர் எத்தனைமுறை நடிக்கச் சொன்னாலும் முகம் சுழிக்காமல் ஒத்துழைக்க வேண்டும். அவர் எதிர்ப்பார்க்கும் வரை நடித்துக் கொடுப்பதுதான் நம் கடமை என்று அவர் கூறியதும் எனக்கு மிகவும் ஆச்சரியம். அட தொழிலில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார். நான் அவரிடம் கற்ற பாடமாக இதை நினைக்கிறேன். இவ்வாறு ஷாம் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in