மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஜீத் ஒரு கிச்சன் கில்லாடி என அனைவரும் அறிந்ததே. அதை தனது வீட்டோடு நிறுத்திக்கொள்ளாமல், படப்பிடிப்புகளிலும் அவ்வப்போது சமையல் செய்து தனது சமையல் திறமை நிரூபித்து வருகிறார்.
மேலும், சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால்,அங்குள்ள ஹோட்டல்களில் ஏதேனும் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டால் அவற்றைப்பற்றிய சில டிப்ஸ்களை அங்கிருப்பவர்களிடம் பெற்று வந்து, சென்னை வந்ததும் தனது வீட்டில் இருப்பவர்களுக்கும் அந்த உணவுகளை சமைத்து கொடுக்கிறாராம் அஜீத்.
அந்த வகையில், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் ஏதேனும் ஸ்பெசல் அயிட்டங்களை குடும்பத்தாருக்கு சமைத்துக்கொடுக்கும் அஜீத், தான் சமைப்பதை போட்டோ எடுக்க வைத்து, தனது இல்லத்திலும் அதை ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறார். ஒரு பிரபல நடிகர் தான் சமைப்பதை விதவிதமான போட்டோ எடுத்து மாட்டியிருப்பதால அவரது வீட்டிற்கு செல்வோர் முதலில் அந்த போட்டோக்களைத்தான் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.