ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்திருக்கிறார் தம்பி ராமைய்யா. இந்த ஆண்டும் அவர் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் இருக்கிறது. அதோடு அத்தனை படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணசித்திர வேடங்களாக இருந்தாலும், அந்த கேரக்டர்களில் அவ்வப்போது காமெடி நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார் தம்பி ராமைய்யா.
மேலும், அவரைப்பொறுத்தவரை சிறந்த குணசித்திர நடிகர் என்பதற்காக மைனா படத்தில் தேசிய விருது பெற்றபோதும், தான் நடிக்கும் கேரக்டர்களில் காமெடியே தூக்கலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால்தான் டைரக்டர்கள் குணசித்திர கேரக்டருக்கு அவரை புக் பண்ணினாலும், தானும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து சில காட்சிகளில் காமெடியையும் சேர்த்துக்கொண்டு நடிக்கிறாராம் தம்பி ராமைய்யா.
அதோடு, அவருக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்பதால், படப்பிடிப்பு தளங்களில் தான் இருக்கும் இடத்தையும் கலகலப்பாகவே வைத்திருக்கும் தம்பி ராமைய்யா, புலி படத்தில் நடித்தபோது யூனிட் நபர்கள் முன்னிலையில் அவ்வப்போது காமெடி சரவெடிகளை கொளுத்திப்போட்டு சிரிக்க வைத்துக்கொண்டேயிருந்தாராம். அதனால் கொஞ்சம் போரடித்தாலும் தம்பி ராமைய்யா இருக்கும் இடத்தை தேடிச்சென்று கொண்டிருந்தார்களாம் சக நடிகர் நடிகைகள்.