Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தம்பியின் வெற்றிக்கு போராடும் தமிழ் சினிமாவின் நிஜ அண்ணன்கள்!

17 ஜூன், 2015 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-brothers---special-story

அந்தக்கால சினிமாவில் இருந்தே... சினிமாவில் ஓர் உயரிய இடத்தை தக்க வைக்க அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். இது எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டு இன்றைய விதார்த் வரை தொடர்கிறது. அதுப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் இது...


எம்.ஜி.ஆர்., - எம்.ஜி.சக்கரபாணி


தமிழ் சினிமாவின் நாடோடி மன்னனாக, உலகம் சுற்று வாலிபனாக திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அவருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை வைத்து நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்ற பல படங்களை தயாரித்து தன் அண்ணனையும் தயாரிப்பாளராக்கினார்.


சிவாஜி - சண்முகம்


தமிழ் சினிமாவில் திருவிளையாடல் புரிந்து தங்கப்பதக்கம் எல்லாம் வாங்கி வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர், சிவாஜி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவரது சகோதரர் சண்முகத்தை வைத்து புதிய பறவை போன்ற படங்களை தயாரித்தார். அதன்பிறகு அவரது மகன் ராம்குமார் அந்த தயாரிப்பு பணிகளை மேற்கொண்டார். பிரபு மட்டுமல்லாது ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்களையும் வைத்து நிறைய படங்கள் தயாரித்துள்ளார்.


முக்தா சீனிவாசன் - முக்தா ராமசாமி


முக்தா சீனிவாசன், முக்தா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவரது அண்ணன் முக்தா ராமசாமியை வைத்து 27 படங்கள் தயாரித்துள்ளார்.


கமல் - சந்திரஹாசன்


ராஜபார்வை பார்த்து, தசவதாரம் புரிந்து உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அவரது சகோதரர் சந்திரஹாசனை தயாரிப்பாளராக்கி, ராஜபார்வை முதல் உத்தமவில்லன் வரை பல படங்களை தயாரித்திருக்கிறார்.


தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம் இந்த அண்ணன் - தம்பி டிரெண்ட் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு மீண்டும் அண்ணன் - தம்பி டிரெண்ட் உருவாகி இருக்கிறது. ஒரு வெற்றிக்காக, அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் போராடி வருகிறார்கள். அவர்கள் இதோ...


தனுஷ் - செல்வராகவன்


தனுஷ் இன்று இந்தளவுக்கு வளர ஆரம்பகாலத்தில் உறுதுணையாக இருந்தவர் என்றால் அது அவரது அண்ணன் செல்வராகவன் தான்.


துள்ளுவதோ இளமை தொடங்கி, மயக்கம் என்ன வரை ஒரு இயக்குநராக தனுஷின் வளர்ச்சியில் இருந்துள்ளார் செல்வா. தன்னை வளர்த்துவிட்ட அண்ணனுக்கு உதவ, தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பாரில் செல்வராகவன் படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


ஜெயம் ரவி - ஜெயம் ராஜா


சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஜெயம் ரவியை, ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் ஜெயம் ராஜா. தொடர்ந்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, போன்ற படங்களை இயக்கி ஜெயம் ரவியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஜெயம் ரவிக்கு ஒரு சிறு சரிவு வரும்போது அவரை தூக்கி நிறுத்தியவர் ராஜா. இப்போதும், தனியொருவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் வௌியாக உள்ளது.


ஆர்யா - சத்யா


ஔிப்பதிவாளர் ஜீவாவின் கண்டுபிடிப்பு ஆர்யா. உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், நான் கடவுள், வேட்டை, ராஜா ராணி... போன்ற வித்தியாசாமான கதாபாத்திரங்களிலும், பல வெற்றி படங்களிலும் இருந்தவர் ஆர்யா. அவரது சமீபத்திய புறம்போக்கு படம் திரைத்துறையினர் மட்டுமல்லாது இலக்கிய துறையிலும் ஆர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. 2010-ல் தி ஷோ பீப்பிள் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தயாரித்தார். படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து 2014-ல் தன் தம்பி சத்யாவிற்காக அமரகாவியம் என்ற படத்தை தயாரித்தார். தற்போதும் தம்பிக்காக நல்ல கதை கேட்டு வருகிறார்.


விஜய் வஸந்த் - வினோத்


வஸந்த் அண்ட் கோ உரிமையாளர் வஸந்த குமாரின் இளைய மகன் விஜய் வஸந்த். சினிமா ஆர்வத்தினால் 2007-ல், வெங்கட்பிரபுவின் சென்னை 600028 படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, நாடோடிகள், கனிமொழி, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து ஓரளவு பேசப்படும் நடிகரானார். 2014-ல் அவருடைய மூத்த அண்ணன் விவிவி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரித்த படம் என்னமோ நடக்குது. இப்படம் நல்ல வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இப்போது அச்சமின்றி என்ற படத்தை இப்போது தன் தம்பிக்காக தயாரித்து வருகிறார் அண்ணன் வினோத். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.


ஆதி - சத்ய பிரபாஸ்


மிருகம், ஈரம், அரவான், கோச்சடையான் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து, வலிமையான உடலாலும், உயரத்தாலும் கோடம்பாக்கத்து நடிகர்களில் கொஞ்சம் பேசப்பட்டவர் ஆதி. அவரது அண்ணன் சத்ய பிரபாஸ் அமெரிக்காவில் இயக்குநர் பட்டப்பயிற்சி முடித்தவர். தன் தம்பியை வைத்து யாகாவாராயினும் நா காக்க என்ற த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலரை பெரிதும் பேசப்பட்டது. ஆதியின் இந்த வெற்றிக்காக உழைக்கிறார் அண்ணன் சத்யபிரபாஸ்.


விக்ராந்த் - சஞ்சய்


விஜய்யின் சித்தி மகன் என்ற அடையாளத்தோடு, 2005-ம் ஆண்டு ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில், கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ராந்த். முதல் கனவே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்தார். அமைதியான முகமும், அதிர்ந்து பேசாத குணமும் தான் இவரது ப்ளஸ். நட்சத்திர கிரிக்கெட்டில் வலம் வந்தவர். தற்போது அவரது அண்ணன் சஞ்சய் இயக்கத்தில் தாக்க தாக்க என்ற பக்கா கமர்ஷியல் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் ஒரு பாடல் காட்சியில் வந்ததை இப்போதும் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் பேசி வருகிறார்கள். மொத்தத்தில் விக்ராந்திற்கு ஒரு வெற்றி தேவை.


விதார்த் அண்ட் பிரதர்ஸ்


சின்ன சின்ன கேரக்டரில் சினிமாவில் தலைகாட்டிய விதார்த், அர்ஜூன் நடித்த திருவண்ணாமலை படத்தில் வில்லனாக நடித்து அறியப்பட்டவர், பிரபுசாலமனின் மைனா படம் மூலம் சுருளி எனும் கேரக்டரில் வாழ்ந்து அனைவராலும் பேசப்பட்டவர் விதார்த். கொள்ளைக்காரன், முதல் இடம், ஆள், வீரம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது தன் தம்பிக்களுக்காக டான் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனை வைத்து குற்றமும் தண்டனையும் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய வெற்றி மட்டுமல்லாமல் தம்பிகளையும் தயாரிப்பாளராக்கி பார்த்து ஆசைப்படுகிறார்.


ஆக தமிழ் சினிமாவில் இப்போது அண்ணன் - தம்பி டிரெண்ட் போய் கொண்டு இருக்கிறது. இவர்களின் ஒவ்வொரு முயற்சியும், உழைப்பும் வெற்றியை நோக்கியே இருக்கிறது. அது அவர்களுக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது போக போகத்தான் தெரியும்.


மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு தற்போதைய அண்ணன்-தம்பி டிரெண்ட் கொஞ்சம் புதுசு தான்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in