ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இப்போதும் அதே இளமையுடன், ஸ்லிம்மாக இருக்கிறார். சமீபத்தில் வருண் மணியன் உடனான திருமணம் நிச்சயமான சமயத்தில் படங்களின் வாய்ப்பை தவிர்த்து வந்த த்ரிஷா, இப்போது அந்த திருமணம் நின்றுவிட்டதால் மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்திருப்பவர் அடுத்தப்படியாக கமல் உடன் தூங்காவனம், சுந்தர்.சியின் அரண்மனை-2, தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக இருக்கிறார். இந்தசூழலில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதுவும் உடல் எடையை குறைத்து, 20 வயது கல்லூரி பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதியவர் கோபி இயக்கும் இப்படத்தை த்ரிஷாவின் மேனேஜர் தயாரிக்கிறார். காமெடி மற்றும் திகில் கலந்த படமாக இப்படம் உருவாக இருக்கிறது.