ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நாயகனாக நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். நடிகை ஸ்ருதிஹாசன் நயாகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இறுதியாக பாடல் காட்சி படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெறுகின்றன. இறுதி பாடல் காட்சி படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. அதோடு இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர். ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.