ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு, தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தை டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.நடிகை பிரணிதா சுபாஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை தொடர்ந்து மஞ்சு விஷ்ணு ஆன்மீக படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. சிவனின் மீது மாறாத அன்புகொண்ட அவரது பக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் தனிகேளா பரணி திட்டமிட்டுள்ளார். சிவ பக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏற்கனவே வெளிவந்த தெலுங்கு படத்தில் நடிகர் கிருஷ்ணமாராஜு நடித்திருந்தார்.தற்போது மீண்டும் தெலுங்கில் உருவாகும் இந்த ஆன்மீக படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பின்னர் நாயகனாக மாறிய சுனில் கண்ணப்பாவா நடிப்பதாக கூறப்பட்டது. தீடீரென சுனில் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு நடிகர் மஞ்சு விஷ்ணு இப்படத்தில் கண்ணாப்பாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுள்ளாராம். இப்படத்தை நடிகர் மஞ்சு விஷ்ணுவே தனது 24 பிரேம்ஸ் பேக்டரி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.