தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உத்தம வில்லன் தோல்விப் படமானதால் எக்கச்சக்க பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான தயாரிப்பாளர் லிங்குசாமி பல இடையூறுகளைக் சந்தித்தார். அது அவர் அடுத்து தயாரிக்கும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன்படத்திலும் எதிரொலித்தது.
ஏற்கெனவே ஃபைனான்ஸ் பிரச்சினையில் இருக்கும் நிறுவனம் எடுக்கும்படம் சரிவர படப்பிடிப்பு நடக்குமா என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். படத்தின் பெயரோ ரஜினி முருகன் .இதற்கு ரஜினி தரப்பு ஒப்புக் கொள்ளுமா என்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால் தலைப்பு சம்பந்தமாக லிங்குசாமி ரஜினியை அணுகிய போது போனிலேயே ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி. இது தொடர்பாக நேரில் சந்திக்கக் கூட வரத் தேவை இல்லை. என்று சம்மதம் சொன்னாராம் ரஜினி. இதே ரஜினி இந்தியில் தன் பெயரை ரஜினிகாந்த் என்று ஒரு படத்துக்கு வைக்க எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இப்படி பெருந்தன்மையுடன் ஒப்புதல் தந்ததை எண்ணி நெகிழ்கிறார் லிங்குசாமி.