தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கேயும் காதல் படத்தை அடுத்து ஜெயம்ரவி- ஹன்சிகா இணைந்து நடித்துள்ள படம் ரோமியோ ஜூலியட். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. குறிப்பாக, அப்படம் வெளியாவதற்கு முன்பே டண்டனக்கா பாடல் சர்ச்சையும் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தின் டைரக்டர் லக்ஷ்மன், காதலித்து விட்டு பசங்களை டீலில் விடும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுப்பதுபோல் படமாக்கியிருப்பதால் இளவட்ட ரசிகர்கள் படத்துக்கு ஏகபோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதோடு, படத்தின் நாயகி ஹன்சிகாவின் நடிப்பை இணையதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்தநிலையில், படத்தின் நாயகனான ஜெயம்ரவியும் மற்றவர்களைப்போன்று ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளி வருகிறார். ஒரு படத்தின் ஹீரோவே இப்படி தன்னுடன் நடித்த நடிகையின் நடிப்பை புகழ்ந்து பேசுவது மற்றவர்களைப் போன்று ஹன்சிகாவுக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளதாம். அதனால் ஜெயம்ரவிக்கு போன் செய்து உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தனது இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்கினாராம் ஹன்சிகா.