இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னையில் வருகிற 22ந் தேதி முதல் 24ம் தேதி வரை ஸ்லோவேனியாக திரைப்பட விழா நடக்கிறது. ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் ஸ்லோவேனியா நாட்டின் 8 முக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 22ந் தேதி நடக்கும் விழாவில் புதுடெல்லி ஸ்லோவேனியா நாட்டின் தூதர் டார்ஜா பாவ்டாஸ் குரேட் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.
இதில் சென்னையில் உள்ள ஸ்லோவேனியா நாட்டின் தூதரக அதிகாரி அமித் கோயல், இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ரஷ்யன் கலாச்சார மையத்தில் உள்ள திரையரங்கில் மாலை 6.15 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் படங்கள் திரையிடப்படுகிறது.