Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது : வருண் தவான்

16 ஜூன், 2015 - 15:31 IST
எழுத்தின் அளவு:
No-One-can-match-Salman-Khan-Varun-Dhawan

சல்மான் பாய் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டார். அவரது இடத்தை, அவரைத்தவிர, வேறு எவராலும் நிரப்ப முடியாது என்று பாலிவுட் நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.


பட்லாபூர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, வருண் தவான், ஏபிசிடி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். ஏபிசிடி 2 படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. ஏபிசிடி 2 படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த வருண் தவான், ஏபிசிடி 2 படம் குறித்தும், படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....


ஏபிசிடி 2 படத்தில் உங்களுக்கு எளிதான கேரக்டரா?


இல்லை. டான்ஸை மையமாக கொண்டுள்ள இப்படத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. இப்படத்தி்ல் புதுவித நடனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடனம் ஆட, எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. காட்சிகள் சிறப்பாக வர வேண்டுமென்பதற்காக, நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டேன். கடின உழைப்பின் காரணமாக, காட்சிகள் குறிப்பிடும்படியாக வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.


நீங்கள் பாலிவுட்டின் ஜான் டிராவோல்டா என்று ரெமோ கூறியுள்ளாரே...அதை எவ்வாறு உணர்கிறீர்கள்?


இயக்குநர் ரெமோ, என்னை அவ்வாறு அழைத்ததற்கு நான் என்ன சொல்லவேண்டும் என்பதே எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த சொல்லை, என் அங்கீகாரமாக கருதுகிறேன். ஸ்ரத்தா தாஸின் நடிப்பு, இந்த படத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் இருக்கும். ஸ்ரத்தாவின் ரசிகர்களுக்கு, ஒரு இனிய வரப்பிரசாதமாக இது நிச்சயம் அமையும்.




உங்கள் படத்தின் புரோமோக்களுக்கு நீங்கள் செல்வீர்களா?


ரசிகர்கள், ஒவ்வொரு படத்திலும், வித்தி்யாசம் வேண்டும் என்பதை தொடர்ந்து எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கும்போது தான், இதனை நான் அறிந்துகொண்டேன். இது பாலிவுட் மட்டுமல்லாது, ஹாலிவுட் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களுக்கும் பொருந்துகிறது. புரோமோஷனல் நிகழ்ச்சிகளில், ரசிகர்களும் நேரடியாக பங்கேற்பதற்கு வழிவகை ஏற்படுகிறது. இந்தமாதிரி நிகழ்ச்சிகளில், அவர்களோடு நாமும் பங்கேற்கும்போது, அவர்களுக்கு மனதில், இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்க நான் விரும்பவில்லை. புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்கேற்பேன். எனது ரசிகர்களும், இதனையே விரும்புகின்றனர்.


அடுத்த சல்மான் கான் நீங்கள் தானாமே?


நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). சல்மான் பாய் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டார். அவரது இடத்தை, அவரைத்தவிர, வேறு எவராலும் நிரப்ப முடியாது. சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்க முயல்கிறேன்.


ஏபிசிடி 2 படத்திற்காக, எந்தளவிற்கு தயாரானீர்கள்?


இயக்குநர் ரெமோ கூறியதை, அவர் சொன்னபடி செய்தேன் அவ்வளவுதான். ரெமோ சிறந்த இயக்குநர். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர். குறைந்த பட்ஜெட்டில் இருந்தாலும், ரெமோவின் படங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.


எதிர்கால திட்டங்கள்...


கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில், ஷூத்தி படம். இந்த படத்தில், எனக்கு ஜோடியாக அலியா பட் நடித்துள்ளார். இந்த படத்தில் என்னைவிட, என் நடிப்பே அதிகம் பேசியுள்ளது. இது முற்றிலும் புதுமாதிரியான கதை ஆகும். படம் எவ்வாறு இருக்கிறது என்று நீ்ங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வருண் தவான் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in