‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இது யார் 'நந்திதா ஸ்வேதா' இரண்டு பெயருள்ள நடிகை என யாரும் யோசிக்க வேண்டாம். 'அட்டகத்தி' படத்தில் அறிமுகமாகி 'எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' போன்ற படங்களில் நடித்த நந்திதா தான் இவர். தன் பெயரை இனிமேல் நந்திதா ஸ்வேதா என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். கூகுளில் போய் நந்திதா என்று போட்டால் எத்தனையோ நந்திதா வருகிறார்கள். அதனால்தான் இந்த பெயர்க் குழப்பம் வேண்டாம் என முடிவெடுத்து தன் சினிமா பெயருடன் ஒரிஜனல் பெயரான ஸ்வேதா என்பதையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் 'புலி' படத்தில் தானும் விஜய் ஜோடியாக நடிக்கிறேன் என்று பெருமையாகப் பேட்டிக் கொடுத்திருக்கிறார். அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை, படத்தில் இரண்டு விஜய் இருக்கிறார்கள், பிளாஷ்பேக்கில் வரும் விஜய்க்கு நான்தான் ஜோடி என்று படத்தின் சீக்ரெட்டையே உடைத்து விட்டார். படத்தின் கதை பற்றியும், கதாபாத்திரங்கள் பற்றியும் இத்தனை நாட்களாக சஸ்பென்சாக வைத்து வருகிறார்கள். விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதியன்று படத்தின் முதல் பார்வை, டீசர் ஆகியவற்றை வெளியிட உள்ளார்கள். ஆனால், அதற்குள் ஆர்வக் கோளாறில் நந்திதா ஸ்வேதா 'புலி' ரகசியத்தை 'புஸ்' என்று ஆக்கி விட்டார்.