தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பாலிவுட்டில் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படத்தின் மூலம், தனுஸ்ரீ தத்தாவின் தங்கை இஷிதா தத்தா அறிமுகமாகி உள்ளார்.
இஷிதா தத்தா, கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின், அவர் த்ரிஷ்யம் படத்தில் நடிப்பதற்கு புதுமுகங்களை தேர்வு செய்யும் வகையிலான ஆடிஷன் நடைபெற்றது. ஆடிஷனில், இஷிதா தத்தா தேர்வானார். படத்தில், அஜய் தேவ்கன் - ஸ்ரேயா சரண் தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில், இஷிதா தத்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம், இஷிதா தத்தா, பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இஷிதாவின் நடிப்பு குறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது, இஷிதா தத்தா சிறந்த நடிகை. த்ரிஷ்யம் படத்தில், இஷிதாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவர் திரைத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகள் எட்ட வாழ்த்துகிறேன் என்று கூறினார்.