Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் உலக வசூல் சாதனை

16 ஜூன், 2015 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Jurassic-world-movie-creates-world-record-in-box-office

உலக அளவில் வெளியான படங்களில் அதிக தொகையை வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அவதார் படம்தான். அதற்கு அடுத்த இடத்தில் டைட்டானிக் படம் உள்ளது.


கடந்த 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் வசூல் சாதனையைப் பார்த்தால் விரைவில் இந்தப்படமும் உலக வசூல் சாதனை படங்களில் பட்டியலில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பல வருடங்களுக்கு முன் 'ஜுராசிக் பார்க்' படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம் - 'ஜுராசிக் வேர்ல்டு'. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் எடுக்கப்பட்ட படம் என்பதால் 'ஜுராசிக் வேர்ல்டு' படத்திற்கு உலகம் முழுக்கவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை படமும் ஏமாற்றவில்லை. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் வசூல் சாதனை அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. இப்படத்தின் முதல் 4 நாட்கள் வசூல் மட்டுமே 1310 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களிலும் உலகளவில் 2ஆவது அதிகபட்ச முதல் வார வசூல் இதுதானாம். 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'அவெஞ்சர்ஸ்' திரைப்படம் முதல் வார இறுதியில் 1330 கோடி ரூபாய் வசூல் செய்தததே இதுவரை அதிகபட்ச சாதனையாக உள்ளது. 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் பட்ஜெட் 960 கோடி ரூபாய். அதை 3ஆவது நாளே திரும்ப எடுத்துவிட்டது. 'ஜுராசிக் வேர்ல்டு' திரைப்படம் 4 நாட்களில் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளதால், இன்னும் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என பாக்ஸ் ஆபிஸ் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in